காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கக்கூடிய சட்டம் கொண்டுவரப்படும் அந்த சட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது - அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது

காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கக்கூடிய சட்டம் கொண்டுவரப்படும் அந்த சட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது -  அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது
X
காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கக்கூடிய சட்டம் கொண்டுவரப்படும் அந்த சட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது - அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு*
காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கக்கூடிய சட்டம் கொண்டுவரப்படும் அந்த சட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது - அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பருவநிலை மாற்றமும் வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் வேளாண்மை துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய பல்வேறு வகையான வேளாண் உற்பத்தி பொருட்கள், விதைகள், பயிர்கள், உரங்கள், வேளாண் கருவிகள், வேளாண் இடு பொருட்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகிய மூன்று அமைச்சர்கள் இணைந்து துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் பொருட்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து வேளாண்மை சார்ந்த புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். நிகழ்ச்சியில்அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேசுகையில், அனைவரும் பச்சை துண்டு போடக் உணர்வு திமுக ஆட்சியில் தான் வந்துள்ளது விவசாயிகளை மதிக்க கூடிய சூழல் திமுக ஆட்சியில் உருவாகியுள்ளது.‌ ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கி பெண்களை பொருளாதார ரீதியில் உயர்த்தியது மு க ஸ்டாலின் அரசு. நிதியமைச்சர் ஆதிகாலத்து கதை எல்லாம் பேசக்கூடியவர். விவசாயிகளை காக்கக்கூடிய நேரத்தில் நாம் இருக்கிறோம் இந்த மண்ணின் மைந்தர் தங்கம் தென்னரசு விவசாயிகளுக்கு அதிக நிதியை வழங்க வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக மழை அதிக அளவு பொழிகிறது. இதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கக்கூடிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். மேட்டூர் அணை திறக்காமலேயே குருவை சம்பா பயிர்கள் விளைகிறது.‌ நீர்நிலைகள் அனைத்தும் நிறைந்துள்ளது. அதிக அளவு விவசாயிகளை இந்த கண்காட்சியில் பங்கேற்க வைக்க வேண்டும் என வேளாண்மை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். கொரோனா காலத்தில் அனைத்து மூடப்பட்ட நிலையில் கொரானா காலத்தில் விவசாயிகள் மட்டும் விவசாயம் செய்து பயிர் செய்தார்கள் அதனால் தான் உயிரோடு இருக்கிறோம். காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கக்கூடிய சட்டம் கொண்டுவரப்படும் அந்த சட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது விரைவில் அதற்குரிய பதில் கிடைக்கும்‌ என பேசினார்.‌ மேலும் பேசி அவர் பேசுவது எல்லாம் ஜாக்கிரதையாக பேச வேண்டி உள்ளது. எதையாவது ஒன்று பேசினால் வாட்ஸ் அப்பில் வந்துவிடுகிறது. அதற்காக நம்ம ஸ்டைலை மாற்ற முடியுமா. நாம் பேசுவதை பாதியாகத் திரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுகிறார்கள். பேசுவதற்கே பயமாக உள்ளது தங்கம் தென்னரசு போல பேசிவிட வேண்டும் என அமைச்சர் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Next Story