மின் சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி

மின் சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி
X
தாராபுரத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி
தாராபுரத்தில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்டம் சார்பில் தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு பேரணி தொடங்கியது. பேரணிக்கு செயற்பொறியாளர் கோபால்சாமி தலைமை தாங்கினார். தேசிய மின் சக்தி சிக்கன வாரத்தை முன்னிட்டு இந்தப் பேரணி நடைபெற்றது.பேரணியில் மின் சிக்கனத்தை எவ்வாறு பேணி காப்பது என்பது குறித்து  விழிப்புணர்வு பதாகைகளை ஊழியர்கள் ஏந்தி வந்தனர். மேலும் பஸ் நிலையம், பூக்கடைக்காரர், உடுமலை ரவுண்டானா பகுதிகளில் மின்சிக்கணத்தை வலியுறுத்தி பொது மக்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.  பேரணிநகரின் முக்கிய விதிகளின் வழியாக சென்று மீண்டும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
Next Story