நாட்டுத் துப்பாக்கியால் வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற நரிக்குறவர் .

X
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு (55) விவசாயி. அவர் காலை வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வயலுக்கு சென்று கொண்டிருந்தார் அவ்வழியாக சென்ற நரிக்குறவரை பார்த்து வளர்ப்பு நாய் குறைத்ததால், ஆத்திரமடைந்த அவர் தனது கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே நாய் இறந்தது. ஆசையாக வளர்த்து வந்த நாயை தனது கண் எதிரில் சுட்டுக் கொன்றதால் வேதனை அடைந்த விவசாய டில்லி பாபு பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை கோட்டூர்புரம் சேர்ந்த ஷாங்காட்(60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

