பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு.

பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு.
X
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர், ஜன. 4- பரமத்திவேலூர் ஏல சந் தையில் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். பரமத்திவேலூர் வட்டாரதில் ஆனங்கூர், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகர்,கோப்பணம்பாளையம்,கபி லர்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.250- க்கும், பச்சை முல்லைப் பூ ரூ.1,000-க்கும், வெள்ளை முல் லைப்பூ ரூ.800-க்கும், செவ்வந் திப்பூ ரூ.140-க்கும், கனகாம்ப ரம் ரூ.500-க்கும், பன்னீர் ரோஜா ரூ.150-க்கும். காக்கட்டான் பூ ரூ.400-க்கும் ஏலம் போனது. இன்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.1,700-க்கும், சம்பங்கி ரூ.220- க்கும், அரளி ரூ.300-க்கும். ரோஜா ரூ.300-க்கும், பச்சை முல்லைப் பூ ரூ.1,600-க்கும். வெள்ளை முல்லைப் பூ ரூ.1,400-க்கும், செவ்வந்தி பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், பன்னீர் ரோஜா ரூ.250-க்கும், காக்கட்டான் பூ ரூ.700-க்கும் ஏலம் போனது. பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story