பொத்தனூர் மகா பகவதியம்மன் கோவில் திருவிழா.

X
Paramathi Velur King 24x7 |4 Jan 2025 8:59 PM ISTபொத்தனூர் மகா பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
பரமத்திவேலூர், ஜன.4: பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் எழுந்தருளியுள்ள மகா பகவதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி முதல் நாள் நிகழ்ச்சியாக நன்செய் இடையாறு ராஜா கோவிலில் இருந்து மணி வேல் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை வெள்ளா ளர் தெரு, வெங்கமேடு, பாலாஜி நகர், நாவல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாமி ஊர் விளையாடும் நிகழ்ச்சியும், 2-ம் நாள் ஜேடர்பாளையம் ரோடு, கல்லூரி சாலை, வெங்கமேடு, சங்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாமி ஊர் விளை யாடும் நிகழ்ச்சி யும், 3-ம் நாள் நிகழ்ச்சியாக காவிரி ஆற்றில் இருந்து பகவதியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது. பின்னர் 4-ம் நாள் பொங்கல் மாவிளக்கு மற்றும் கலை நிகழ்ச்சியும், 5-ம் நாள் கிடாவெட்டு மற்றும் மஞ்சள் நீராடல் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகா பகவதியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
