ஸ்ரீ அரசமர மணிகண்ட சுவாமி திருக்கோயில் உற்சவ விழா மற்றும் திருவிளக்கு பூஜை
Tiruppur King 24x7 |4 Jan 2025 3:49 PM GMT
காங்கேயம் ஸ்ரீ அரசமர மணிகண்ட சுவாமி திருக்கோயில் 49 ஆம் ஆண்டு உற்சவ விழா மற்றும் திருவிளக்கு பூஜை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அக்ரஹார வீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ அரசு வேம்பு விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ அரசமர மணிகண்ட சுவாமி திருக்கோயில் 49 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காங்கேயம் அக்ரஹார வீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ அரசு வேம்பு விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ அரசமர மணிகண்ட சுவாமி திருக்கோவில் 49 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த 1ம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாத சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றது. நேற்று இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு வழிபாடு உன்னதமான இடத்தை பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் ஒரே இடத்தில் எழுந்தருள செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேத ரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறி வருகின்றது. விளக்கு வழிபாடானது சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகின்றது என்கின்றனர் பக்தர்கள். பின்னர் பஜனை பாடல்கள் பாடிய பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் 108 விளக்குகள் வைத்து சிறுமிகள் மற்றும் பெண்கள் பல்வேறு வேண்டுதல்களுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த 49 ஆம் ஆண்டு உற்சவ விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனையும் மாலை சாமி ஊர்வலமும் நடைபெற உள்ளது.
Next Story