ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரிவு உபசார விழா.
Madurai King 24x7 |4 Jan 2025 3:52 PM GMT
மதுரை அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப் புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனடிப்படையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி இன்று (ஜன.4) நடைபெற்றது. இக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் துணைத் தலைவர் கேபிள் ராஜா, வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மனோ பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
Next Story