மின்சாரம் தாக்கி தென்னை மரம் ஏறும் தொழிலாளி பலி
Dindigul King 24x7 |4 Jan 2025 7:28 PM GMT
அய்யலூர் அருகே மின்சாரம் தாக்கி தென்னை மரம் ஏறும் தொழிலாளி பலி
திண்டுக்கல், வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே உள்ள செக்கணத்துப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி கனகராஜ் என்பவருது தோட்டத்தில் தென்னைமரம் ஏறிக் கொண்டிருந்த போது மரத்தில் இருந்த தென்னை மட்டையை அகற்றும் போது எதிர்பாராத விதமாய் பொன்னுச்சாமி மீது மின்சாரம் தாக்கி 20 அடி தென்ன மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story