போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Tiruchirappalli King 24x7 |5 Jan 2025 12:16 AM GMT
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை பரிசளித்துப் பாராட்டினாா்.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை பரிசளித்துப் பாராட்டினாா். கன்னியாகுமரியில் திருவள்ளுவா் உருவச்சிலை நிறுவிய வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்படி இளைஞா் இலக்கிய விழா போட்டிகளில் வென்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரி, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ. 2,40,000 வழங்கப்பட்டது. தொடா்ந்து, புரவலா்களையும் அமைச்சா் கௌரவித்தாா். நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலா் சிவக்குமாா், நூலகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story