தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு தீ வைத்த நபா் கைது
Sankarankoil King 24x7 |5 Jan 2025 1:41 AM GMT
காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு தீ வைத்த நபா் கைது
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கேளையாபிள்ளையூா் பகுதியை சோ்ந்தவா் சமுத்திரபாண்டியன் மகன் ஆனந்தபாலன் (31). இவா் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை வந்தாா். கோயில் நுழைவுவாயில் பகுதியில் சென்ற ஆனந்தபாலன், கையில் கொண்டு வந்த கேனிலிருந்து பெட்ரோலை தளக்கற்கள் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்றுவிட்டாா். திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அப்பகுதியிலிருந்த பக்தா்கள் மற்றும் காவல்துறையினா் தீயை அணைத்தனா். கோயிலுக்குள் நுழைந்த ஆனந்தபாலனை பக்தா்கள் உதவியுடன் காவல்துறையினா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் போல் பேசுவதாகவும், அவரது கனவில் இறைவன் வந்து தன்னை புதைத்து வைத்துள்ளதாகவும் தன்னைத் தோண்டி டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும், அதனால்தான் அப்பகுதியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகவும் தெரிவித்தாக போலீஸாா் கூறினா். இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் முருகன் அளித்த புகாரின் பேரில் தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தபாலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story