மின்சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

மின்சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி
X
மின்சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி
தேசிய மின் சிக்கன வார விழாவை யொட்டி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வரை சென்றது. இந்த பேரணிக்கு தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். திட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் முன்னிலை வகித்தார்.இதில், செயற்பொறியாளர்கள் சந்திரன், சிவசங்கரன், ஏழுமலை, ராஜேஸ்வரி உட்பட பொறியாளர்கள், பணியாளர்கள், ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.பேரணியில், மின் சிக்கனத்தை நுகர்வோர், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி, கோஷமிட்டு சென்றனர்.
Next Story