பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த பங்களாதேஷ் சேர்ந்த ஆறு பேர் கைது
Tiruppur King 24x7 |5 Jan 2025 3:33 AM GMT
பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த 6 பேர் கைது - பல்லடம் போலீசார் நடவடிக்கை.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் உரிய ஆவனங்கள் இன்றி பங்களாதேஷை சேர்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்தவர்களை அழைத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் பங்களாதேஷை சேர்ந்த ரவ்ஹான் அலி 36,ஹரிருள் இஸ்லாம் 26, ரஹ்மான் 20, சோஹில் இஸ்லாமி 20,சபிபுல் இஸ்லாம் 40,அப்துல் ஹோசன் 27 என்பது தெரிய வந்தது.மேலும் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்து கட்டிடம் மற்றும் பனியன் நிறுவனங்களில் பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த பல்லடம் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
Next Story