போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள பழமையான கட்டிடம் இடித்து அகற்றும்
ஈரோடு மேட்டூர் ரோட்டில் 55 வருட பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டிடம் உறுதி தன்மையுடன் இல்லை இதை இடித்து அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பொறியாளர் வல்லுனர் குழு கட்டிடத்தை ஆய்வு செய்த இப்போது இந்த கட்டிடம் உறுதி தன்மை குறைவாக இருப்பதாகவும் பயன்படுத்த உகந்ததல்ல என கூறியது. இதனை அடுத்து அந்தக் கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இன்று காலை மாநகராட்சி பணியாளர்கள் இரண்டு பொக்லைனுடன் கட்டிடத்தை இடுக்கும் பணியில் ஈடுபட்டனர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
Next Story