மாடியில் இருந்து தவறி விழுந்து அனல்மின் நிலைய ஊழியர் பலி!
Thoothukudi King 24x7 |5 Jan 2025 6:45 AM GMT
தூத்துக்குடியில் புத்தாண்டை வரவேற்று பாட்டுபோட்டு டான்ஸ் ஆடியபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்த அனல்மின் நிலைய ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் புத்தாண்டை வரவேற்று பாட்டுபோட்டு டான்ஸ் ஆடியபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்த அனல்மின் நிலைய ஊழியர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர் குடியிருப்பு, கேம்ப் 1 பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் தங்க மாரியப்பன் (27), இவர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 31 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடி கொண்டிருந்தாராம். அப்போது பாட்டு போட்டு டான்ஸ் ஆடி கொண்டிருந்த போது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபனா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Next Story