கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு!
Thoothukudi King 24x7 |5 Jan 2025 6:48 AM GMT
தூத்துக்குடியில் கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடியில் கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி டூவிபுரம் மூன்றாவது தெருவில் ஒரு வீட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் திருச்சியை சேர்ந்த ஜான் பீட்டர் மகன் டேனியல் கிஷோர் (24) என்பவர் சென்ட்ரிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தாரம். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்து டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story