வனத்துறை எச்சரிக்கை
Erode King 24x7 |5 Jan 2025 8:58 AM GMT
ஆசனூர் அருகே சாலை ஓரத்தில் உலா வரும் யானை கூட்டங்கள் வனத்துறை எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில் நேற்று ஹாசன் ஊரிலிருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலை ஓரத்தில் உலா வந்தது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுத்து யானைக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த யானை கூட்டம் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது பற்றிய வனத்துறையினர் கூறும் போது,வனச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும் எனவும் எக்காரணம் கொண்டும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்
Next Story