பரமத்தி வேலூர் தொகுதி இளைஞர் அணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதளப் பயிற்சி முகாம்.
Paramathi Velur King 24x7 |5 Jan 2025 6:39 PM ISTபரமத்தி வேலூர் தொகுதி இளைஞர் அணி 254 பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதளப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர், ஜன.05: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலைதளப் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு திமுகவின் கொள்கைகள் மற்றும் திமுக வளர்ச்சிக்காக அண்ணா, கலைஞர்,ஸ்டாலின் தற்போது உள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எவ்வாறு பயணித்தார்கள் என்பது குறித்தும் வளர்ப்பதற்கு அவர்கள் கொண்ட நடவடிக்கையில் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். திமுக இளைஞரணி சமூக வலைத்தள பாசறை ஆட்சியாளர் இளமாறன் கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் இளைஞர் அணியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்பு எடுத்தார். பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 254 வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர் ஜெகதீஷ் குமார், கார்த்திகேயன், தொகுதி பொறுப்பாளர் உமாராணி உட்பட நகரம், பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர் நன்றி உரை கூறினார்.
Next Story


