உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அமைச்சர் மதிவேந்தன் கொடியேற்றி வைத்தார்.

X
Paramathi Velur King 24x7 |5 Jan 2025 7:13 PM ISTபரமத்தி வேலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அமைச்சர் மதிவேந்தன் கொடியேற்றி வைத்தார்.
பரமத்தி வேலூர், ஜன. 05: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் முன்னால் பரமத்தி ஒன்றிய செயலாளரும் வேலூர் பேரூர் கழகச் செயலாளருமான சீனிவாசன் நினைவு புதிய கொடிக்கம்பத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா திமுக பிரமுகர் கண்ணன், பேரூர்,நகர, ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கழக வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.
Next Story
