வத்திராயிருப்பு அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது ...*
Virudhunagar King 24x7 |6 Jan 2025 1:02 AM GMT
வத்திராயிருப்பு அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது ...*
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது ... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் மேற்கு காலனி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (26). இவரது மனைவி ராசாத்தி(22).இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு அலெக்ஸ்பாண்டி(5) என்ற மகனும், லட்சனா(4) என்ற மகளும் உள்ளனர். பார்த்திபன் லோடு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.இவர் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்று மது போதையில் வீட்டிற்கு வந்த பார்த்திபன், மனைவி ராசாத்தி உடன் தகராறில் ஈடுபட்டு, பித்தளை கரண்டியால் தலையில் அடித்து கொலை செய்தார். தகவலறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார் பார்த்திபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் கோட்டையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story