தண்ணீர் வாளியில் தவறி விழுந்த குழந்தை பலி .
Madurai King 24x7 |6 Jan 2025 1:10 AM GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக சிவக்குமார் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகள் மற்றும், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் இரண்டாவது மகன் சிவமித்ரனுக்கு ஒன்றரை வயதாகிறது. இந்த குழந்தை நேற்று (ஜன.5) வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆடு, மாடுகளுக்கு குடிப்பதற்கான தண்ணீர் வைக்கப்படடிருந்த வாளியில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story