மாநில போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

X
விழுப்புரம், பெருந்திட்ட வளாகத்தில் நடந்த மாரத்தான் போட்டியை, கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த போட்டி, 16 வயதிற்கு உட்பட்ட பிரிவு, 18 வயதிற்கு உட்பட்ட, 20 வயதிற்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 8 பிரிவுகளாக நடத்தப்பட்டது.இதில், 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 16 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு 2 கி.மீ., அளவில் பெருந்திட்ட வளாகத்திலிருந்து அரசு சட்டக்கல்லுாரி சென்று மீண்டும் பெருந்திட்ட வளாகம் வந்தடைந்தனர். 18 வயது பிரிவில் மாணவர்களுக்கு 6 கி.மீ., அளவில் பெருந்திட்ட வளாகம் - அரசு பணிமனை வரையிலும், மாணவிகளுக்கு 4 கி.மீ., அளவில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் வரை சென்றனர்.20 வயது பிரிவில், மாணவர்களுக்கு 8 கி.மீ., அளவில் ஜானகிபுரம் சந்திப்பு அருகே வரையிலும், மாணவிகளுக்கு 6 கி.மீ., அளவில் அரசு பணிமனை வரையிலும், 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ., அளவில் ஜானகிபுரம் ரவுண்டானா வரை போட்டி நடைபெற்றது.முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன், திருவண்ணாமலை மாவட்ட சங்க செயலாளர் புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

