துப்பாக்கி வெடித்து சிறுவன் படுகாயம்
Kallakurichi King 24x7 |6 Jan 2025 3:57 AM GMT
படுகாயம்
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரை சேர்ந்தவர் கபில்தேவ் மகன் கரண், 12; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை 11:45 மணியளவில் கரண் அங்குள்ள வயல்வௌியில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு, தென்னை மட்டைக்கு அடியில் வைக்கப் பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை கரண் மிதித்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்ததில், கரணின் வலது கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்த கரணை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக கோயம்புத்துார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி யாருடையது என வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story