வனத்துறையினர் எச்சரிக்கை
Erode King 24x7 |6 Jan 2025 5:25 AM GMT
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு பர்கூர் மலைப்பாதையில் கவனத்துடன் செல்ல வேண்டும் வனத்துறையினர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அந்தியூர் வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர். அதில் தற்போது அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் மழைக்காலம் முடிந்து பனி அதிகரித்துள்ளது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் வறட்சி தொடங்கியுள்ளது. வனவிலங்குகள் குறிப்பாக ஒற்றை மற்றும் யானை கூட்டம் மாலை நேரங்களில் அதிகமாக வரட்டு பள்ளம் அணைப்பகுதி, வன சாலை பகுதியில் நடமாடுவது அதிகரித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு விலங்குகளை படம் பிடிப்பது, வேடிக்கை பார்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம். மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் மனைக்கு மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
Next Story