அரியலூர் மாவட்ட புதிய எஸ் பி யாக தீபக் சுவாஜ் பொறுப்பேற்பு.
Ariyalur King 24x7 |6 Jan 2025 7:35 AM GMT
அரியலூர் மாவட்ட புதிய எஸ் பி யாக தீபக் சுவாஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்..
அரியலூர், ஜன.6- அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி தீபக் சுவாஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். அரியலூர் மாவட்டத்தின் 14 -வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபக் சுவாஜ் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல்துறை கண்காணிப்பு அலுவலர் தீபக் சுவாஜுக்கு அரியலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர். செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாஜ், அரசின் சட்ட திட்டங்களை பின்பற்றுவதற்கும், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், வழக்குகளை பதிவு செய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். முதல் குற்ற அறிக்கை பதிவு செய்வதும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும். குடிபோதையில் வாகன இயக்கம் மற்றும் போதை பொருள் கடத்தல் போதை பொருள் விற்பனை தடுப்பு மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை ஆகியவை எடுக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் எஸ்சி எஸ்டி வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது. இதற்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்குகளின் மீதான நடவடிக்கைகளும் விரைந்து செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
Next Story