இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த காவல் ஆணையர்.
Madurai King 24x7 |6 Jan 2025 8:00 AM GMT
மதுரை விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் "சாலை பாதுகாப்பு மாதம் 2025" காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை இன்று (ஜன.6)தமுக்கம் சந்திப்பில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, ஊர் காவல்படை காவலர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். மேற்படி இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி, கோரிப்பாளையம் மேம்பாலம், கீழ் மாசி வீதி, தெற்கு மாசி வீதி வழியாக மேலமாசி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. முன்னதாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சென்ற பொதுமக்களுக்கு தமுக்கம் சந்திப்பில் இனிப்பு மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை காவல் ஆணையர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை ஆணையர் போக்குவரத்து, காவல் கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் உதவி ஆணையர்கள் நகர், தல்லாகுளம் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story