பட்டுக்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு தலை துண்டான நிலையில் வாலிபர் சடலம் மீட்பு.
Thanjavur King 24x7 |6 Jan 2025 11:39 AM GMT
கிரைம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நவக்கொல்லே பிடாரியம்மன் கோவில் அருகே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் திங்கள்கிழமை காலை வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்த நபர் நல்லமான்கொல்லை பகுதியைச் சேர்ந்த தயாநிதி (29) என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆன நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பட்டுக்கோட்டை ரயில்வே காவல்துறையினர் தயாநிதி மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மதுபோதையில் தவறி தண்டவாளத்தில் விழுந்த நிலையில் ரயில் ஏறி விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story