சாத்தூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ....

சாத்தூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ....
X
சாத்தூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ....
சாத்தூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் பெருகிவரும் பாலியல் வன்முறை மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பிய கட்சியினர் தமிழகத்தில் பெருகிவரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பாலியல் வன்முறை மற்றும் போதைப் பொருள் புழக்கம் மக்கள் விரோத நடவடிக்கை ஆகியவற்றை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்டம் பகுதிகளைச் சேர்ந்த நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு கண்டினக் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story