மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார்

மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார்
X
விருதுநகர் மாவட்டம் மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் அருப்புக்கோட்டை இணைந்து நடத்திய, பருவநிலை மாற்றமும், வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (04.01.2025 முதல் 06.01.2025 வரை) நடைபெற்ற மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார். பருவநிலை மாற்றமும், வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் நடைபெற்ற மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவினை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் 04.01.2025 அன்று துவக்கி வைத்தனர். அதன்படி, மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழா, பருவநிலை மாற்றமும், வேளாண் உற்பத்தியும் என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 04.01.2025 முதல் 06.01.2025 வரை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான வறட்சி தாங்கி வளரும் பயிர்கள், நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள், இயற்கை உரங்கள், பசுமை இல்ல வசதிகள், சூரிய சக்தி பயன்பாடு, கால்நடை வளர்ப்பு மற்றும் புதிய விவசாய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியில் விவசாயிகள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விவசாய கருத்தரங்கம், விவசாயப் பொருட்கள் கண்காட்சி, விவசாய உபகரணங்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த கண்காட்சி விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் விவசாயம் செய்ய ஊக்கமளிப்பதாகவும், புதிய தொழில்நுட்பங்கள், தகவல் பரிமாற்றம் மற்றும் சந்தை வாய்ப்புகளை பெறவும் விவசாயிகளுக்கு உதவியாக இருந்தது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்த கண்காட்சி உதவியது. மேலும் இந்த வேளாண்மைத் திருவிழாவில் காலநிலை மாற்றம் மற்றும் விவசாயத்தின் எதிர்கால நிலைத்தன்மையை கையாள்வதற்கான முயற்சிகள் குறித்து பல்வேறு கருத்தரங்கள் நடத்தப்பட்டன. இந்த கண்காட்சி விவசாய பெருமக்களுக்கு காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ள உதவுவதற்கான தகவல்களை பரப்பும் முக்கிய தளமாக அமைந்தன. இந்த கண்காட்சிகளில் விவசாயிகள், அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள், அரசு மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள், பங்கு தாரர்கள் பங்கேற்றனர். இதில், நிலத்தடி நீர் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு, காடுகள் வளர்ப்பு மற்றும் நீர்நிலைகளை உருவாக்குதல் மற்றும் தூர்வாருதல், கடும் மழைப்பொழிவு காலங்களில் பொருளாதார நிலைகளை சந்திக்கும் வகையில் பயிர்களை விளைவித்தல் குறித்த புதிய தொழில்நுட்பங்கள் விவாதிக்கப்பட்டது. காலநிலை மாறுதல்களால் ஏற்படும் அவசர நிலைகள், மழைச்சரிவு மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப, விவசாயிகள் நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் நல்ல பயிர் விளைச்சலுக்கு அதிக வாய்ப்பு உள்ள இனங்களை விளைவித்தல் மற்றும் நீர் பராமரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இக்கண்கட்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த விவசாய கண்காட்சி விவசாயிகளுக்கு பயிர் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் வழிகளை அறிமுகப்படுத்தின. இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான மற்றொரு முக்கிய அம்சமாக, விவசாயிகளுக்கான பயிற்சிகள் மற்றும் செயல்பாட்டுத் தொழில்நுட்பங்கள், பராமரிப்பு முறைகள், மண் அரிப்பினைத் தடுக்கும் முறைகள் உள்ளிட்ட விவசாய உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான விவசாய நடவடிக்கைகள் விரிவடையும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் மற்றும் வேளாண்மை நிலைத்தன்மைக்கு வித்திடும். இந்த மண்டல அளவிலான வேளாண்மைத் திருவிழாவில், அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story