விருதுநகர் சந்தை :பாமாயில், விலை உயர்வு : துவரம் பருப்பு, உருட்டு, தொலி உளுந்தம் பருப்பு விலை குறைவு*

விருதுநகர் சந்தை :பாமாயில், விலை உயர்வு : துவரம் பருப்பு, உருட்டு, தொலி உளுந்தம் பருப்பு விலை குறைவு*
X
விருதுநகர் சந்தை :பாமாயில், விலை உயர்வு : துவரம் பருப்பு, உருட்டு, தொலி உளுந்தம் பருப்பு விலை குறைவு*
விருதுநகர் சந்தை :பாமாயில், விலை உயர்வு : துவரம் பருப்பு, உருட்டு, தொலி உளுந்தம் பருப்பு விலை குறைவு விருதுநகர் சந்தையில் பாமாயில் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. துவரம் பருப்பு , உருட்டு மற்றும் தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.2130 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு டின் ரூ.2180 என விற்கப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ புதுசு நாடு வகை கடந்த வாரம் ரூ.13800 முதல் ரூ.14500 வரை விற்பனையானது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் குவிண்டாலுக்கு ரூ.300 வரை குறைந்துள்ளது. எனவே, ஒரு மூட்டை துவரம் பருப்பு ரூ. 13500 முதல் 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை கடந்த வாரம் ரூ. 12100 என விற்ற நிலையில், இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 மட்டும் குறைக்கப்பட்டு தற்போது ரூ.12ஆயிரம் என விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ. 9600 என விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.200 வரை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.9400 என விற்பனையாகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.4300 என விற்ற நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 குறைக்கப்பட்டு தற்போது ரூ.4200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
Next Story