ராசிபுரம் அருகே நெல்லை கருப்பட்டி காப்பி கடை திறப்பு விழா அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

X
Rasipuram King 24x7 |6 Jan 2025 7:27 PM ISTராசிபுரம் அருகே நெல்லை கருப்பட்டி காப்பி கடையை திறந்து வைத்த அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் நடிகையுமான கௌதமி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியில் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி மகன் துவங்கும் புதிய நெல்லை கருப்பட்டி காபி கடை திறப்பு விழாவானது நடைபெற்றது. விழாவில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் நடிகையுமான கௌதமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு நெல்லை கருப்பட்டி காபி கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வியாபாரத்தை தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கொள்கை பரப்பு துணைசெயலாளர் மற்றும் நடிகை கௌதமி பேசுகையில் இன்றைய காலகட்டத்தில் நமது உடலை காக்க பாரம்பரிய முறையில் உணவுகளை உண்ண வேண்டும். 2026 ஆம் ஆண்டு எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு நீங்கள் தற்போதையிலிருந்து பணியில் ஈடுபட வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கட்சி மீண்டும் கோட்டையில் அமையும் இது உறுதி என பேசினார்.நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட புறநகர் செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் சரஸ்வதி மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story
