வடகரையாத்தூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதை கைவிட வேண்டி ஆர்ப்பாட்டம்.

X
Paramathi Velur King 24x7 |6 Jan 2025 8:23 PM ISTவடகரையாத்தூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதை கைவிட வேண்டி கையெழுத்து இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமத்தி வேலூர், ஜன. 6: பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சியை பேரூராட்சியாக எப்பொழுதும் மாற்றக்கூடாது அதே போல் வடகரையாத் தூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கையெழுத்து இயக்க ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் தலைமை வகித்தார். பள்ளபாளையம் ஒருங்கிணைப்பாளர் கோபி, கண்டிப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, மாரியம்படுகை ஒருங்கிணைப்பாளர் மணிவேல், ஜேடர்பாளையம் ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பாளையம் ஒருங்கிணைப் பாளர் சதீஷ் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் தற்போது நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக் கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்காக ஊராட்சியாக இருப்பதை பேரூராட்சியாக்கும் சமயத்தில் நிர்வாகம் சார்ந்த பாதிப்பினால் அதிக ஏழைகள் வசிக்கும் ஜேடர்பாளையம் மற்றும் அதன் அருகில் உள்ள குக்கிராமங்களில் உள்ள சிறு தொழில் செய்யும் ஏழை மக்கள் அனைவரும் மிகப்பெரிய இழப்பினை சந்திக்க நேரிடும். பொதுமக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் இருக்காது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் வராது. கலைஞர் கனவு இல்ல திட்டம் இருக்காது. ஆட்டு வளர்ப்பு பண்ணை கிடைக்காது. கிராமப்புற பயனாளிகள் தாய் திட்டம் இருக்காது. தண்ணீர் வரி பல மடங்கு அதிகரிக்கும். சொத்து வரி பல மடங்கு அதிகரிக்கும். வேளாண்மை நிலங்களின் காய்கறிகள் உணவு பொருட்கள் கிடைக்காமல் வீட்டு நிலமாக மாறும் வாய்ப்புள்ளது என்பதால் வடகரையாத்தூர் ஊராட்சி யை பேரூராட்சியாக எப்போதும் மாற்றப்படக்கூடாது. அதேபோல் வடகரையாத்தூர் ஊராட்சியை இரண்டாக பிரித்து ஜேடர்பாளையத்தை ஒரு ஊராட்சியாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிப் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கையெழுத்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
