பரமத்திவேலூர் அருகே குடும்பத்தகராறு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

X
Paramathi Velur King 24x7 |6 Jan 2025 8:34 PM ISTபரமத்தி வேலூர் அருகே குடும்பத்தகராறில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், ஜன.6: பரமத்தி வேலூர் மேற்கு தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுப்பிரமணி (52). இவர் வாழவந்தியில் ஆயில் மோட்டார் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இவர் மது அருந்திவிட்டு அவருடைய குடும்பத்தாரோடு தகராறு செய்துள்ளார். பின்னர் வாழவந்தி கடைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகு றித்து அவரது மகன் தினேஷ்குமாருக்கு செ ல்போன் மூலம் தொடர்பு கொண்டு சுப்பிரமணி கடைக்குள் தூக்கில் தொங்குவதாாக தகவல் அளித்ததையடுத்து அவர் இதுகுறித்து பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
