தா.பழூர் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட திமுக எம்எல்ஏ.

தா.பழூர் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட  திமுக எம்எல்ஏ.
X
ஆளுநரைக் கண்டித்து அரியலூரில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தா.பழூர் நிர்வாகிகள் கலந்து கொள்ள கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவுமான க.சொ.க. கண்ணன் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கு உத்திரவிட்டார்.
அரியலூர், ஜன.6- தா.பழூர் நிர்வாகிகளுக்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வுமான க.சசா.க. கண்ணன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அரியலூர் மாவட்ட திமுக சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டலின் படி 7.01.25 அன்று காலை 10.00 மணியளவில், அரியலூர் அண்ணாசிலை அருகில் ஒன்றிய அரசின் கைக்கூலி ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைப்பெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தா.பழூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள்,மாவட்ட அணி நிர்வாகிகள்,கிளை செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Next Story