ராசிபுரத்தில் திமுக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைதள பயிற்சி
Rasipuram King 24x7 |6 Jan 2025 3:36 PM GMT
ராசிபுரத்தில் திமுக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைதள பயிற்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள திமுக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு சமூக வலை தள பயிற்சி முகாம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. இம்முகாமில், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், திராவிட இயக்க எழுத்தாளர் மதிமாறன், திமுக இளைஞர் அணி சமூக வலைதள பயிற்சியாளர் இளமாறன் ஆகியோர் கலந்துகொண்டு திமுக இளைஞர் அணியினருக்கு பல்வேறு வலைதள பயன்பாட்டு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். முகாமில், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், ஒன்றியச் செயலர் கே.பி.ஜெகந்நாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ. கே.பாலசந்திரன், மாவட்ட இளைஞ ரணி செயலர் விஸ்வநாத் உள்ளிட்ட ஒன்றிய, நகர, இளைஞரணி நிர் வாகிகள் பங்கேற்றனர்.
Next Story