வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி சான்றிதழ் பெற வேளாண் வணிகத்துறை சார்பில் மானியம் வேளாண் வணிக துணை இயக்குனர் தகவல்
Ariyalur King 24x7 |6 Jan 2025 4:10 PM GMT
வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி சான்றிதழ் பெற வேளாண் வணிகத்துறை சார்பில் மானியம் வேளாண் வணிக துணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
அரியலூர் ஜன.6- அரியலூர் மாவட்டம் வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை ஏற்றுமதி செய்திட சான்றிதழ் பெற்றிருந்தால் அதற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர்கள், அரசின் ஏற்றுமதி தொடர்பான நடைமுறைகளை கடைப்பிடித்து ஏற்றுமதி சான்றிதழ் பெறுவதை அரசு ஊக்குவிக்கிறது. இவ்வாறு ஏற்றுமதி செய்வதால் விவசாயிகள் வருமானம் பலமடங்கு உயரும். ஏற்றுமதி சான்றிதழ் பெறுவதற்கு தமிழக அரசு ரூ.15ஆயிரம் மானியம் வழங்குகிறது. அரியலூர் மாவட்டத்தில் முந்திரி, பழங்கள், காய்கறிகள், முருங்கை பயிரிடும் விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர்கள் 2024 ஏப்ரல் 1ம் தேதி, அதற்கு பின்னர் இறக்குமதி ஏற்றுமதி குறியீடு(IE Code), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் (APEDA) பதிவு செய்ததற்கான சான்றிதழ் (RCMC), வேளாண் மற்றும் மதிப்புகூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான சான்றிதழ்கள் ஆகியவற்றினை பதிவு செய்ததற்கான ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். எனவே, ஏற்றுமதியில் ஆர்வம் உள்ள விவசாயிகள் அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலக தொடர்பு எண்கள் 9443645845, 9655526980 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கோவிந்தராசு தெரிவித்துள்ளார்
Next Story