அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு
Chennai King 24x7 |6 Jan 2025 4:27 PM GMT
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாமகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு அனுமதி அரசு வழங்க மறுக்கிறது. பேசுவதற்கும் வாய்ப்பு அளிக்கவில்லை, போராடுவதற்கும் அனுமதி இல்லை. இப்படி அனுமதி மறுக்கப்பட்டு போராடியவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து மண்டபத்தில் பிடித்து வைக்கின்ற கொடிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதையொட்டி பாமக வெளிநடப்பு செய்திருக்கிறோம். அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி எந்த அமைப்பாக இருந்தாலும் சரி ஜனநாயகத்திற்கு போராடுவதற்கு உரிமை இருக்கிறது. அதுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுவுடமைக் கட்சிகள் கூட அவற்றை சொல்கின்றனர். திமுக கூட்டணி கட்சியில் இருக்க கூடியவர்களே இதை சொல்கிறார்கள் என அவர் கூறினார்.
Next Story