இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத்திருத்தம்-2025- க்காக 29.10.2024 முதல் 28.11.2024 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று(06.01.2025) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9,29,706, பெண் வாக்காளர்கள் 9,85,625 மற்றும் இதர வகுப்பினர் 233 என மொத்தம் 19,15,564 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்துக்கொள்ளும் பொருட்டு இறுதி வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தேர்தல் வட்டாட்சியர் முத்துராமன், வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவல்
Next Story