பொங்கல் தொகுப்பு வழங்குதற்காக டோக்கன் வழங்குவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
Thiruvarur King 24x7 |6 Jan 2025 6:16 PM GMT
திருவாரூர் மாவட்டம், ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள குடியிருப்புகளில் நியாய விலை கடை மூலம் பொங்கல் தொகுப்பு வழங்குதற்காக பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுவருவதனை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள குடியிருப்புகளில் நியாய விலை கடை மூலம் பொங்கல் தொகுப்பாக அரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழு நீள கரும்பு ஆகியவை வழங்குவதற்காக பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுவருவதனை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருமதி.சித்ரா, வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story