ராமநாதபுரம் சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மனு
Ramanathapuram King 24x7 |7 Jan 2025 2:45 AM GMT
மயானத்துக்கு போக வழியில்லாம வயலுக்குள்ள பொணத்தை தூக்கிட்டு போறோம்"- புகைப்படங்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புலம்பிய பொதுமக்கள
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலை அடுத்த நெடுங்குறிச்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு பகுதிக்கு செல்ல எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என, குற்றம் சாட்டும் அந்த கிராம மக்கள் போதிய சாலை வசதி செய்து தரப்படாததால் சுடுகாட்டிற்கு, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும், வேறு வழியின்றி உடல்களை வயல்வெளிக்குள் தூக்கிச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றம் சாட்டும் கிராம மக்கள் தங்களது பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை வசதி, சுற்றுச்சுவர் குடிநீர், தகனமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்படி செய்து கொடுக்கப்படாத பட்சத்தில் விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் கிராம மக்கள் தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story