சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
Nagercoil King 24x7 |7 Jan 2025 3:02 AM GMT
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவிற்கான மூன்றாம் திருவிழாவான நேற்று இரவு சிறப்பு மிக்க மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு கற்பக விருட்ச வானத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 10:30 மணிக்கு கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளுக்கு நடக்கும் திருவிழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக வருகை தந்தனர். சுவாமியும் அம்பாளும் கிழக்கு திசை நோக்கி நிற்க மூன்று முறை வலம் வந்து கோவிலுக்குள் செல்லும் மக்கள் மார்சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நான்காம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 10:30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதி வரும் நிகழ்ச்சியில் நடைபெறுகிறது.
Next Story