மீண்டும் தலை துாக்கும் பேனர் கலாச்சாரம்

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, எண்டத்தூர் சாலை ஆகிய சாலைகள் பிரதான சாலைகளாக உள்ளன.இந்த சாலைகளை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர், உத்திரமேரூரில் உள்ள பேருந்து நிலையம், கோவில்கள், தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு, வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், போக்குவரத்து நிறைந்த இந்த சாலைகளின் ஓரத்தில், அரசியல் கட்சியினர், வணிக நிறுவத்தினர் விளம்பர பேனர் வைத்து வருகின்றனர். இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சாலையோரங்களில் பேனர் வைப்பது குறித்து, நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை மதித்து, பேரூராட்சி நிர்வாகம், பேனர்களை அகற்ற முன்வருமாறு, வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
Next Story

