வானுார் ஒன்றிய குழுக்கூட்டம் பா.ம.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Villuppuram King 24x7 |7 Jan 2025 4:24 AM GMT
வானுார் ஒன்றிய குழுக்கூட்டம் பா.ம.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வானுார் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று சேர்மன் உஷா முரளி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் தேவதாஸ், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 23வது வார்டு கவுன்சிலரான பா.ம.க.,வை சேர்ந்த மகாலட்சுமி மகாலிங்கம், எனது வார்டில் வி.புதுப்பாக்கம், நாராயணபுரம், ரங்கநாதபுரம், கடகம்பட்டு, செங்கமேடு ஆகிய ஐந்து ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் எனது வார்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது.அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி, வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு பா.ம.க., கவுன்சிலர் ராஜ்குமாரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.பின்னர் இரு கவுன்சிலர்களும் கூறுகையில், எங்கள் வார்டுகளுக்கு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்காததால், மக்கள் பணியை மேற்கொள்ள முடியவில்லை.அதனால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.ஒன்றிய சேர்மன் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து, பா.ம.க., சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Next Story