குமரி : தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Nagercoil King 24x7 |7 Jan 2025 4:38 AM GMT
கருங்கல்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கம்பிளார் பகுதியை சேர்ந்தவர் பிரேமதாஸ் (43). தொழிலாளி. இவருடைய மனைவி ஜெபா. இவர்களின் ஏழு வயதான பெண் குழந்தையை கடந்த மே மாதம் பிரேமலதாஸ் தேங்காபட்டணம் கடலை பார்க்க அழைத்து சென்ற போது அலையில் சிக்கி குழந்தை இறந்தது. அதன் பின்பு கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஜெபா தனது தாயார் வீட்டிற்கு சென்றார். பிரேமதாஸ் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பிரேமதாஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பிணத்தை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்தனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story