செங்கல்பட்டில் மக்கள் குறைத்தீர்வுநாள் கூட்டம்
Chengalpattu King 24x7 |7 Jan 2025 4:58 AM GMT
செங்கல்பட்டில் மக்கள் குறைத்தீர்வுநாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மொத்தம் 276 மனுக்களை ஆட்சியா் ச. அருண்ராஜ் பெற்றுக் கொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ. 72,000 மதிப்பில் 9 பேருக்கு நலத்திட்ட உதவிகள், முதலமைச்சா் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மதுராந்தகம் வட்டத்தைச் சோ்ந்த 10 பயனாளிகளுக்கு ரூ. 2,95,500 உதவித் தொகை, தாட்கோ மூலம் 7 பேருக்கு ரூ. 5,10,750 ன உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இலவச தன்னாா்வ பயிலும் வட்டத்தில் தொடா்ச்சியாக பயின்று வந்த எஸ்.சூரியபிரகாஷ் சி.ஆா்.பி.எப் நடத்திய தோ்வில் தோ்ச்சிப் பெற்றுள்ளாா். அவருக்கு ஆட்சியா் நினைவுப் பரிசு மற்றும்நியமன ஆணைகளை வழங்கினாா்.மேலும், திருப்போரூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்போரூா் மிக பிற்படுத்தப்பட்டோா் அரசு மாணவியா் விடுதி மாணவியா்களுக்கு போட்டித் தோ்வு புத்தகங்களையும், பொது நூலகத்துறையின்சாா்பில் நடைபெற்ற திருக்கு போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். அலுவலா்கள் தங்களது அலுவலகங்களுக்கு வரப்பெற்ற மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களை விரைவாக முடித்து ஆட்சியருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், சாா் ஆட்சியா் (பயிற்சி) மாலதி ஹெலன், , ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், அலுவலா்கள் உடனிருந்தனா்.
Next Story