தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாமக்கல்லில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை தொடங்கியது.அதன்படி சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி எந்தவித உரையையும் நிகழ்த்தாமல் திரும்பிச் சென்றார்.இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவையின் மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாகவும், தமிழக முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி
நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர்
.மாவட்ட திமுக அவைத் தலைவர் மணிமாறன், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ராசிபுரம் நகர் மன்ற தலைவர் கவிதா சங்கர், நாமக்கல் நகர செயலாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story