ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை, தையல் இயந்திரம் இயக்குபவர் தொழில்பிரிவு 46-வது அணிக்கான நேரடி சேர்க்கை வரும் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 7- ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய், சேர்க்கை கட்டணம் 100 ரூபாய் ஆகும். மேலும் விவரங்களுக்கு 04344-262457 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
Next Story

