கிராம மக்கள் மனு

X
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அந்தியூர், பவானி பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய விளைநிலங்கள் யாவும் மழை பெய்யும் காலங்களில் அதனால் கிடைக்கும் நீரை கொண்டும் ஆழ்துளை கிணற்று நீரை கொண்டும் விவசாயம் செய்யும் நிலங்களாகும். இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். பவானி அந்தியூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள், சிறிய ஏரிகள் குளம் குட்டைகள் உள்ளன. இந்த பகுதியில் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். மற்ற காலங்களில் ஏரிகள் வறண்டு காணப்படும். இந்த ஏரி குளங்கள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. கர்நாடகாவில் மழை பெய்து அணைகள் நிரம்பி அதன் உபரிநீரும், மேட்டூர் அணை நிரம்பும் பொழுது தமிழகத்தில் மழை பெய்து அதன் மூலம் மேட்டூர் அணை நிரம்பும் பொழுதும் அதன் உபரி நீர் பல நூறு டி எம் சி தண்ணீர் ஆண்டு தோறும் கடலில் வீணாக கலக்கிறது. இந்த ஏரிகளில் காவிரி ஆற்றில் உபரி நீரை நீரேற்று திட்டத்தின் மூலம் நிரப்பினால் இந்த பவானி அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான இயக்க விவசாய நிலங்கள் செழிப்படையும். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நீரேற்று திட்டத்தினை கொண்டு வந்து ஏரி குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர் அவர்கள் அதில் கூறியிருந்தனர். இவர்களுடன் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு, மாவட்ட தலைவர் பிரபு, வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீசன் உள்பட பலர் இருந்தனர்
Next Story

