சங்கரன்கோவிலில் திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

X
தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உத்தரவின் பேரில் தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து இன்று காலையில் சங்கரன்கோவில் தபால் அலுவலகம் முன்பு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆட்டுக்குட்டியுடன் வந்த திமுக நிர்வாகி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சரவணன், நகரச் செயலாளர் பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் யூ,எஸ், டி. சீனிவாசன். மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம். மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்க வளவன், மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இசக்கிதுரை. மாவட்டத் துணைச் செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

