நாட்றம்பள்ளி அருகே டீ மாஸ்டருக்கு கத்தி குத்து

நாட்றம்பள்ளி அருகே டீ மாஸ்டருக்கு கத்தி குத்து
X
நாட்றம்பள்ளியில் டீ மாஸ்டருக்கு! கத்தியால் குத்திய மனநிலை பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே டீ மாஸ்டருக்கு கத்தி குத்து! மனநலம் பாதிக்கப்பட்டவரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பச்சூர் டோல்கேட் பகுதியில் குண்டுமணி என்பவர் 11 வருடங்களாக ஆவின் பாலகம் என்ற பெயரில் டீக்கடை வைத்து வருகிறார். இந்த கடையில் மேல்மாமுடி மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் டீ மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் பச்சூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (30) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறது நேற்று இரவு ஒரு மணி அளவில் டீக்கடைக்கு டீ சாப்பிட வந்துள்ளார் அப்போது கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துள்ளார் அப்போது சக்திவேல் தட்டி கேட்டபோது பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் நிலைகுலைந்த சக்திவேலை மீட்டு அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதன் காட்சிகள் அதே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன இந்த நிலையில் திரும்பவும் விடியற்காலை மனநலம் பாதிக்கப்பட்ட பிரபாகரன் அதே கடைக்கு வந்துள்ளார் இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிகிறது மேலும் இந்த சம்பவ குறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சக்திவேலை மீட்டு முதல் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்றம்பள்ளி அருகே டீ மாஸ்டரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Next Story