ராமநாதபுரம் திமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ராமநாதபுரம் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் உத்தரவின்படி, ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நுழைவாயிலில் திமுகவினர் தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவமானப்படுத்தி வருவதாகவும் எனவே ஆளுநரை கண்டித்தும் அதிமுக பாஜக கட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார் கண்டன ஆர்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆளுநர் ரவிக்கு எதிராகவும் பாஜக மற்றும் அதிமுக எதிராகவும் கோஷங்களை எழுப்பினர் அதனைத் தொடர்ந்து மண்டபம் ஒன்றிய செயலாளர் பிரவீன் நன்றியுரை கூறினார்
Next Story






